குறிஞ்சி · மதுரை மருதன் இளநாகனார்
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. தலைமகள் சொல்லியதுமாம். · மதுரை மருதன் இளநாகனார் பாடியது
நெஞ்சுடம் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கிஇரவின் வரூஉம் 1இடும்பை நீங்கவரையக் கருதும் ஆயின் பெரிதுவந்துஓங்குவரை யிழிதரும் வீங்குபெயல் நீத்தம்காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாதுஅரிமதர் மழைக்கண் 2சிவப்ப நாளைப்பெருமலை நாடன் மார்புபுணை யாகஆடுகம் வம்மோ காதலந் தோழிவேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்துஇன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்ஓடுபுறங் கண்ட தாடோய் தடக்கைவெல்போர் வழுதி செல்சமத் துயர்த்தஅடுபுகழ் எஃகம் போலக்கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே.
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. தலைமகள் சொல்லியதுமாம். · மதுரை மருதன் இளநாகனார் பாடியது