பாலை · வடமோதங்கிழார்
தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. · வடமோதங்கிழார் பாடியது
மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்றுநகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும்முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்பொன்செய் கன்னம் பொலிய வெள்ளிநுண்கோல் அறைகுறைந் துதிர்வன போலஅரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்துஓங்கிசைன நறுவீ கோங்கலர் உறைப்பத்துவைத்தெழு தும்பித் தவிரிசை விளரிமானே முற்ற காமர் வேனில்வெயிலவர் புரையும் வீததை மரா அத்துக்குயிலிடு பூசல் எம்மொடு கேட்பவருவே மென்ற பருவம் ஆண்டைஇல்லை கொல்லென மெல்ல நோக்கிநினைந்த மிருந்தன மாகநயந் தாங்குவந்துனின் றனரே காதலர் 2நந்துறந்துஎன்னுழி யதுகொல் தானே பன்னாள்அன்னையும் அழிவுற அணங்கிநன்னுதற் பாஅய பசலை நோயே.
தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. · வடமோதங்கிழார் பாடியது