பாலை · கயமனார்
மகட் போக்கிய செவிலி சொல்லியது. · கயமனார் பாடியது
பசித்த யானைப் பழங்கண் அன்னவறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளிவிசித்துவாங்கு பறையின் விடரகர் தியம்பக்கதிர்க்கால் அம்பிணை உணீஇய புகலேறுகுதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாதுஆண்குரல் விளிக்கும் சேண்பால் 1வியன்சுரைப்படுமணி இனநிரை உணீஇய கோவலர்விடுநிலம் உடைத்த கலுழ் 2கட் கூவல்கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்புன்றலை மன்றத் தங்குடிச் சீறூர்த்துணையொடு துச்சில் இருக்குங் கொல்லோகணையோர் அஞ்சாக் கடுங்கட் காளையொடுஎல்லி முன்னுறச் செல்லுங் கொல்லோஎவ்வினை செயுங்கொல் நோகோ யானேஅரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇயாயறி வுறுதல் அஞ்சிவேயுயர் பிறங்கல் மலையிந் தோளே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. · கயமனார் பாடியது