பாடல் 316 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 316 · மருதம் · ஓரம்போகியார்

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கைஅரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்புஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்பைந்நிண வராஅல் குறையப் 1பெயர் தந்துகுரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன்aதேர்தர வந்த தெரியிழை 4நெகிழ்தோள்ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீபுலத்தால் ஒல்லுமே மனைகெழு மடந்தைஅதுபுலந் துறைதல் வல்லி யோரேசெய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்தாமட் டுண்டு தமிய ராகித்தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்பவைகுந ராகுதல் அறிந்தும்அறியா ரம்மவஃ துடலு மோரே.
பகிர்
கதை

மருதம் · ஓரம்போகியார்

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது · ஓரம்போகியார் பாடியது