குறிஞ்சி · எருமை வெளியனார் மகனார் கடலனார்
(1) தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. · எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடியது
இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றைஇரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண்ஆறே அருமர பினவே யாறேசுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலையகழைமாய் நீத்தம் கல்பொரு திரங்கஅஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந்தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇயஇருங்களி றட்ட பெருஞ்சின உழுவைநாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்தமேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்வாள்நடந் தன்ன வழக்கருங் கவலைஅருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக.வந்தோன் கொடியனும் அல்லன் தந்தநீதவ றுடையையும் அல்லை நின்வயின்ஆனா அரும்படர் செய்தயானே தோழி தவறுடை யேனே.
Irulkizhip pathupoal minni vaanam / Thulithalaik konta nalipeyal natunaal / Minmini moyththa muravuvaayp purram / Ponneri pithirir sutara vaangkik / Kurumpi kentum perungkai aerrai / Irumpusey kollenath thoanrum aangkan / Aarae arumara pinavae yaarae / Suttunarp panikkunj soorutai muthalaiya / Kazhaimaay neeththam kalporu thirangka / Anjuvan thamiyam ennaathu manjusuman / Thaatukazhai naralum anangkutaik kavaaan / Eeruyirp pinavin vayavuppasi kalaiiya / Irungkali ratta perunjina uzhuvai / Naama nallaraak kathirpata umizhntha / Maeymani vilakkin pulara eerkkum / Vaalnatan thanna vazhakkarung kavalai / Arulpuri nenjamoa teஃkuthunai yaaka. / Vanthoan kotiyanum allan thantha / Neethava rutaiyaiyum allai ninvayin / Aanaa arumpatar seytha / Yaanae thoazhi thavarutai yaenae.
(1) தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. · எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடியது