பாடல் 11 · கலித்தொகை · ஐம்புலவர்

கலித்தொகை 11 · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன்

'அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தைமென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.என ஆங்கு,இனை நலம் உடைய கானம் சென்றோர்புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே.
பகிர்
கதை

பாலைக்கலி · பெருங்கொடுங்கோன்

முதலாவது பகுதி · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன் பாடியது