பாடல் 15 · கலித்தொகை · ஐம்புலவர்

கலித்தொகை 15 · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன்

அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் -இணைப் படைத் தானை அரசோடு உறினும் -கணைத் தொடை நாணும், கடும் துடி ஆர்ப்பின்,எருத்து வலிய எறுழ் நோக்கு இரலைமருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,உருத்த கடும் சினத்து, ஓடா மறவர்,பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடுஅருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் -புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீமை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீமன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?என ஆங்கு,அனையவை போற்ற, நினைஇயன நாடிக் காண்;வளமையோ வைகலும் செயல் ஆகும்; மற்று இவள்முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்தஇளமையும் தருவதோ, இறந்த பின்னே?
பகிர்
கதை

பாலைக்கலி · பெருங்கொடுங்கோன்

முதலாவது பகுதி · பாலைக்கலி · பெருங்கொடுங்கோன் பாடியது