வையை
மையோடக் கோவனார் பாடியது · இசை: பித்தாமத்தர் · பண்: பாலையாழ்
(தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை,‘நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக என்றாட்கு, அப் புனலாணி இன்பமும், பல்வேறு வகைப்பட்டஇன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, ‘என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்‘ என்றது.)— வையைப் புனலின் வருகை —திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளியநிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்தவந்தன்று, வையைப் புனல்— புனலின் செயல் —நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,உய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;உழவர் களி தூங்க, முழவு பணை முரல,ஆடல் அறியா அரிவை போலவும்,ஊடல் அறியா உவகையள் போலவும்,வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்செய்கின்றே, செம் பூம் புனல்.— வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல் —‘கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;மாதர் மடநல்லார், மணலின் எழுதியபாவை சிதைத்தது‘ என அழ, ஒருசார்;‘அகவயல் இள நெல் அரிகால் சூடுதொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;‘ஓதம் சுற்றியது ஊர்‘ என, ஒருசார்;‘கார் தூம்பு அற்றது வான்‘ என, ஒருசார்;‘பாடுவார் பாக்கம் கொண்டென,ஆடுவார் சேரி அடைந்தென,கழனி வந்து கால் கோத்தென,பழன வாளை பாளை உண்டென,வித்து இடு புலம் மேடு ஆயிற்றென,உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,சினை வளர் வாளையின் கிளையடு கெழீஇ,பழன உழவர், பாய் புனல் பரத்தந்து,— வையைப் புனலின் வனப்பு —இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,வரை புரை உருவின் நுரை பல சுமந்து,பூ வேய்ந்து, பொழில் பரந்து;துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,அலர் தண் தாரவர், காதில்தளிர் செரீஇ, கண்ணி பறித்து;கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,மேகலை, காஞ்சி, வாகுவலயம்,எல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்ஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்டதானையான் வையை வனப்பு— தோழி புனலணி இன்பம் கூறுதல் —புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,கை புதைஇய வளைஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்புபரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;வையைப் பெருக்கு வடிவு— தோழி தலைமகன் காதன்மை கூறுதல் —விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,கூர் நறா ஆர்ந்தவள் கண்.கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,‘என்னை வருவது எனக்கு?‘ என்று, இனையா,நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,தீர்விலதாகச் செருவுற்றாள்___ செம் புனல்ஊருடன் ஆடுங்கடை.— தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல் —புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;பொருது இழிவார் புனல் பொற்பு-அ•துஉரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க---நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே
மையோடக் கோவனார் பாடியது · இசை: பித்தாமத்தர் · பண்: பாலையாழ்