பாடல் 71 · பதிற்றுப்பத்து · பல புலவர்கள்

பதிற்றுப்பத்து 71 · குறுந்தாள் ஞாயில்

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்துசெறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்பரூஉப்பக(டு) உதிர்த்த மென்செந் நெல்லின்அம்பண அளவை உறைகுவித் தாங்குக்கடுந்தே(று) உறுகிளை மொசிந்தன துஞ்சும்செழுங்கூடு கிளைத்த இளம்துணை மகா஡஢ன்அலந்தனர் பெருமநின் உடற்றி யோரேஊர்எரி கவர உருத்(து)எழுந்(து) உரைஇப்போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்பமதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்ஆர்எயல் தோட்டி வெளவினை ஏறொடுகன்(று)உடை ஆயம் தாணஇப் புகல்சிறந்துபுலவுவில் இளையர் அங்கை விடுப்பமத்துக்கயி(று) ஆடா வைகல்பொழுது நினையூஉஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்பதிபாழ் ஆகா வேறுபுலம் படர்ந்துவிருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றெனஅரும்சமத்(து) அருநிலை தாங்கிய புகர்நுதல்பெரும்களிற்(று) யானையொ(டு) அரும்கலம் தராஅர்மெய்பனி கூரா அணங்(கு)எனப் பராவலின்பலிகொண்டு பெயரும் பாசம் போலத்திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழிஉரவரும் மடவரும் அறிவுதொ஢ந்(து) எண்ணிஅறிந்தனை அருளாய் ஆயின்யார்இவண் நெடுந்தகை வாழு மோரே.

Araaa yaanar akankan seruvin / Aruvi aampal neythalotu arinthu / Seruvinai makalir malintha vekkaip / Paroouppaka(tu) uthirththa mensen nellin / Ampana alavai uraikuvith thaangkuk / Katunthae(ru) urukilai mosinthana thunjum / Sezhungkootu kilaiththa ilamthunai makaa஡஢n / Alanthanar perumanin utarri yoarae / Ooreri kavara uruth(thu)ezhun(thu) uraiip / Poarsutu kamazhpukai maathiram maraippa / Mathilvaayth, thoanral eeyaathu thampazhi ookkunar / Kuntukan akazhiya kurunthaal njaayil / Aareyal thoatti velavinai aerotu / Kan(ru)utai aayam thaanaip pukalsiranthu / Pulavuvil ilaiyar angkai vituppa / Maththukkayi(ru) aataa vaikalpozhuthu ninaiyoou / Aanpayam vaazhnar kazhuvul thalaimatangkap / Pathipaazh aakaa vaerupulam patarnthu / Virunthin vaazhkkaiyotu perunthiru arrena / Arumsamath(thu) arunilai thaangkiya pukarnuthal / Perumkalir(ru) yaanaiyo(tu) arumkalam tharaaar / Meypani kooraa anang(ku)enap paraavalin / Palikontu peyarum paasam poalath / Thiraikontu peyarthi vaazhkanin oozhi / Uravarum matavarum arivutho஢n(thu) enni / Arinthanai arulaay aayin / Yaarivan netunthakai vaazhu moarae.

பகிர்
கதை

குறுந்தாள் ஞாயில்

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு