பாடல் 143 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 143 · யார்கொல் அளியள் · கபிலர்

‘மலைவான் கொள்க!’ என, உயர்பலி தூஉய்,‘மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க! ‘ எனக்கடவுட் பேணிய குறவர் மாக்கள்,பெயல்கண் மாறிய உவகையர், சாரல்புனைத்தினை அயிலும் நாட! சினப் போர்க்கைவள் ஈகைக் கடுமான் பேக!யார்கொல் அளியள் தானே; நெருநல்,சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்,குணில்பாய் முரசின் இரங்கும் அருவிநளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்.வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,நின்னும்நின் மலையும் பாட, இன்னாதுஇகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்.முலையகம் நனைப்ப, விம்மிக்குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே?

‘malaivaan kolka!’ ena, uyarpali thoouy, / ‘maari aanru, mazhaimaekku uyarka! ‘ enak / Katavut paeniya kuravar maakkal, / Peyalkan maariya uvakaiyar, saaral / Punaiththinai ayilum naata! sinap poark / Kaival eekaik katumaan paeka! / Yaarkol aliyal thaanae; nerunal, / Suran uzhanthu varunthiya okkal pasiththenak, / Kunilpaay murasin irangkum aruvi / Naliirunj silampin seeroor aangkan. / Vaayil thoanri, vaazhththi ninru, / Ninnumnin malaiyum paata, innaathu / Ikuththa kanneer niruththal sellaal. / Mulaiyakam nanaippa, vimmik / Kuzhalinai vathupoal azhuthanal, perithae?

பகிர்
கதை

யார்கொல் அளியள் · கபிலர்

திணை: பெருந்திணை · துறை: குறுங்கலி; தாபதநிலையும் ஆம் · பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் · குறிப்பு: துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது