உலைக்கல்லன்ன வல்லாளன் · உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை · துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம் · பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சிவில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப,வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனேசிறுகண் யானை வெண்கோடு பயந்தஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்குஇரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்விசைத்துஎறி கூடமொடு பொருஉம்உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.
திணை: வாகை · துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம் · பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்