யாமும் செல்வோம் · ஆவூர் மூலங் கிழார்
திணை: வாகை · துறை: பார்பபன வாகை · பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்
நன் றாய்ந்த நீள் நிமிர்சடைமுது முதல்வன் வாய் போகாது,ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,ஆறுணர்ந்த ஒரு முதுநூல்இகல் கண்டோர் மிகல் சாய்மார்,மெய் அன்ன பொய் உணர்ந்து,பொய் ஓராது மெய் கொளீஇ,மூவேழ் துறைபும் முட்டின்று போகியஉரைசால் சிறப்பின் உரவோர் மருக!வினைக்கு வேண்டி நீ பூண்டபுலப் புல்வாய்க் கலைப் பச்சைசுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;மறம் கடிந்த அருங் கற்பின்,அறம் புகழ்ந்த வலை சூடிச்,சிறு நுதல், பேர் அகல் அல்குல்,சில சொல்லின் பல கூந்தல், நின்நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;காடு என்றா நாடுஎன்று ஆங்குஈரேழின் இடம் முட்டாது,நீர் நாண நெய் வழங்கியும்,எண் நாணப் பல வேட்டும்,மண் நாணப் புகழ் பரப்பியும்,அருங் கடிப் பெருங் காலை,விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅதுபொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;செல்வல் அத்தை யானே; செல்லாது,மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்கழைவளர் இமயம்போல,நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?
Nan raayntha neel nimirsatai / Muthu muthalvan vaay poakaathu, / Onru purintha eeri rantin, / Aarunarntha oru muthunool / Ikal kantoar mikal saaymaar, / Mey anna poy unarnthu, / Poy oaraathu mey koleei, / Moovaezh thuraipum muttinru poakiya / Uraisaal sirappin uravoar maruka! / Vinaikku vaenti nee poonta / Pulap pulvaayk kalaip passai / Suval poonnjaan misaip poliya; / Maram katintha arung karpin, / Aram pukazhntha valai sootis, / Siru nuthal, paer akal alkul, / Sila sollin pala koonthal, nin / Nilaik koththanin thunaith thunaiviyar / Thamakku amaintha thozhil kaetpak; / Kaatu enraa naatuenru aangku / Eeraezhin itam muttaathu, / Neer naana ney vazhangkiyum, / En naanap pala vaettum, / Man naanap pukazh parappiyum, / Arung katip perung kaalai, / Virunthu urranin thirunthu aenthunilai, / Enrum, kaankathil amma, yaamae! kutaaathu / Ponpatu netuvaraip puyalaeru silaippin, / Pooviri puthuneerk kaaviri purakkum / Thanpunar patappai emmoor aangkan, / Untum thinrum oornthum aatukam; / Selval aththai yaanae; sellaathu, / Mazhaian naappa neetiya netuvaraik / Kazhaivalar imayampoala, / Nileeiyar aththai, nee nilamisai yaanae?
திணை: வாகை · துறை: பார்பபன வாகை · பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்