பாடல் 196 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 196 · குறுமகள் உள்ளிச் செல்வல் · ஆவூர் மூலங்கிழார்

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவதுஇல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்புகழ்குறை படூஉம் வாயில் அத்தைஅனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,வெயிலென முனியேன், பனியென மடியேன்,கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்மெல்லியல் குறுமகள் உள்ளிச்செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!
பகிர்
கதை

குறுமகள் உள்ளிச் செல்வல் · ஆவூர் மூலங்கிழார்

திணை: பாடாண் · துறை: பரிசில் கடா நிலை · பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்