நெஞ்சம் மயங்கும் · பொத்தியார்
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை · குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,இனையதோர் காலை ஈங்கு வருதல்;‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசைஅன்னோனை இழந்தஇவ் வுலகம்என்னா வதுகொல்? அளியது தானே!
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை · குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது