பாடல் 221 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 221 · வைகம் வாரீர் · பொத்தியார்

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;அனையன் என்னாது, அத்தக் கோனை,நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;பைதல் ஒக்கல் தழீஇ, அதனைவைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,கெடுவில் நல்லிசை சூடி,நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.
பகிர்
கதை

வைகம் வாரீர் · பொத்தியார்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை · பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் · குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது