பாடல் 239 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 239 · இடுக, சுடுக, எதுவும் செய்க · பேரெயின் முறுவலார்

தொடி யுடைய தோள் மணந்தணன் ;கடி காவிற் பூச் சூடினன் ;தண் கமழுஞ் சாந்து நீவினன் ;செற் றோரை வழி தபுத்தனன் ;நட் டோரை உயர்பு கூறினன் ;வலியரென, வழி மொழியலன் ;மெலியரென, மீக் கூறலன்;பிறரைத் தான் இரப் பறியலன் ;இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;வருபடை எதிர் தாங்கினன் ;பெயர் படை புறங் கண்டனன் ;கடும் பரிய மாக் கடவினன் ;நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்;தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ !படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!
பகிர்
கதை

இடுக, சுடுக, எதுவும் செய்க · பேரெயின் முறுவலார்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை · பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்