வன்மையும் வண்மையும் · இரும்பிடர்த் தலையார்
திணை: பாடாண் · துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி · பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடைநிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,ஏம முரசம் இழுமென முழங்க,நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,தவிரா ஈகைக், கவுரியர் மருக!செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!பொன் னோடைப் புகர் அணிநுதல்துன்னருந் திறல் கமழ்கடா அத்துஎயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்துமருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;பொலங் கழற்காற்,புலர் சாந்தின்விலங் ககன்ற வியன் மார்ப!ஊர் இல்ல, உயவு அரிய,நீர் இல்ல, நீள் இடைய,பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்உன்ன மரத்த துன்னருங் கவலை,நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அதுமுன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்இன்மை தீர்த்தல் வன்மை யானே.
Uvavumathi uruvin oangkal venkutai / Nilavukkatal varaippin mannakam nizharra, / Aema murasam izhumena muzhangka, / Naemi yuyththa naee nenjin, / Thaviraa eekaik, kavuriyar maruka! / Seyirtheer karpin saeyizhai kanava! / Pon noataip pukar aninuthal / Thunnarun thiral kamazhkataa aththu / Eyiru pataiyaaka, eyirkathavu itaaak / Kayirupinik konta kavizhmani marungkil. / Perungkai yaanai irumpitarth thalaiyirunthu / Marunthil koorraththu arunthozhil saayaak / Karungkai olvaal perumpeyar vazhuthi! / Nilam peyarinum, ninsor peyaral; / Polang kazharkaar,pular saanthin / Vilang kakanra viyan maarpa! / Oor illa, uyavu ariya, / Neer illa, neel itaiya, / Paarval irukkaik, kavikan noakkir, / Senthotai pizhaiyaa vankan aatavar / Ampuvita, veezhnthoar vampap pathukkaith / Thirunthusirai valaivaayp parunthirunthu uyavum / Unna maraththa thunnarung kavalai, / Ninnasai vaetkaiyin iravalar varuvar! athu / Munnam mukaththin unarnthu, avar / Inmai theerththal vanmai yaanae.
திணை: பாடாண் · துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி · பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி