பாடல் 366 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 366 · மாயமோ அன்றே · கோதமனார்

விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,ஒருதா மாகிய பெருமை யோரும்,தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே;அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;நின் ஊற்றம் பிறர் அறியாது,பிறர் கூறிய மொழி தெரியா,ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,இரவின் எல்லை வருவது நாடி,உரை . . . . . . . . . . .உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப,கெடல் அருந் திருவ . . . . . . .மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளிவிடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்,காவு தோறும் . . . . . . . .மடங்கல் உண்மை மாயமோ அன்றே.

Vizhukkatippu araintha muzhukkural murasam / Ozhukkutai marungkin orumozhith thaaka, / Aravueri urumin urarupu silaippa, / Oruthaa maakiya perumai yoarum, / Thampukazh nireeis senrumaayn thanarae; / Athanaal, arivoan makanae! maravoar semmaal! / . . . . . . . . . . uraippak kaenmathi; / Nin oorram pirar ariyaathu, / Pirar kooriya mozhi theriyaa, / Njaayirru ellai aalvinaikku uthavi, / Iravin ellai varuvathu naati, / Urai . . . . . . . . . . . / Uzhavozhi perumpakatu azhithin raangkus, / Sengkan makalirotu siruthuli alaii, / Angkal thaeral aangkalaththu ukuppa, / Ketal arun thiruva . . . . . . . / Matai vaentunarkku itai arukaathu, / Avizh vaentunarkku itai aruli / Vitai veezhththus sootu kizhippa, / Neerneelai peruththa vaarmanal ataikaraik, / Kaavu thoarum . . . . . . . . / Matangkal unmai maayamoa anrae.

பகிர்
கதை

மாயமோ அன்றே · கோதமனார்

திணை: பொதுவியல் · துறை: பெருங்காஞ்சி · பாடப்பட்டோன்: தருமபுத்திரன்