நெல் என்னாம்! பொன் என்னாம் · புறத்திணை நன்னாகனார்
திணை: பாடாண் · துறை: கையறுநிலை · பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்
மென் பாலான் உடன் அணை இ,வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரைஅறைக் கரும்பின் பூ அருந்தும்;வன் பாலான் கருங்கால் வரகின். . .அங்கண் குறுமுயல் வெருவ, அயலகருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;விழவின் றாயினும், உழவர் மண்டைஇருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து;. . . . . கிணையேம் பெரும!நெல் என்னாம், பொன் என்னாம்,கனற்றக் கொண்ட நறவு என்னும்,. . . . மனை என்னா, அவை பலவும்யான் தண்டவும், தான் தண்டான்,நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடைமண் நாணப் புகழ் வேட்டு,நீர் நாண நெய் வழங்கிப்,புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை;அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்குயாண்டு நிற்க வெள்ளி, மாண்டஉண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.வந்த வைகல் அல்லது,சென்ற எல்லைச் செலவு அறி யேனே!
திணை: பாடாண் · துறை: கையறுநிலை · பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான்