காவிரி அணையும் படப்பை · கல்லாடனார்
திணை: பாடாண் · துறை: வாழ்த்தியல் · பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை
வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப,புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்,தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி,வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரைநிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து,வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே;காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பைநெல்விளை கழனி அம்பர் கிழவோன்.நல்அரு வந்தை, வாழியர்; புல்லியவேங்கட விறல்வரைப் பட்டஓங்கல் வானத்து உறையினும் பலவே!
திணை: பாடாண் · துறை: வாழ்த்தியல் · பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை