காவன்மரமும் கட்டுத்தறியும் · காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டுஇறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்கடிமரம் தடிதல் ஓம்பு! நின்நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.
திணை: வஞ்சி · துறை: துணை வஞ்சி · பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்