பாடல் 52 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 52 · ஊன் விரும்பிய புலி · மருதன் இளநாகனார்

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,வடபுல மன்னர் வாட, அடல் குறித்து,இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்துயார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடிவயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்,பெருநல் யாணரின் ஒரீஇ, இனியேகலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,நரைமூ தாளர் நாயிடக் குழிந்தவல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்கான வாரணம் ஈனும்காடாகி விளியும் நாடுடை யோரே!

Anangku utai netungkoattu alaiyakam munaii, / Munangku nimir vayamaan muzhuvali oruththal, / Oonnasai ullam thurappa, isai kuriththuth / Thaan vaentu marungkin vaettuezhun thaangku, / Vatapula mannar vaata, atal kuriththu, / Innaa vempoar iyalthaer vazhuthi! / Ithunee kanniyathu aayin, iru nilaththu / Yaarkol aliyar thaamae? oorthorum / Meensutu pukaiyin pulavunaaru netung koti / Vayaluzhai maruthin vaangkusinai valakkum, / Perunal yaanarin oreei, iniyae / Kali kezhu katavul kantham kaivitap / Palikan maariya paazhpatu pothiyil, / Naraimoo thaalar naayitak kuzhintha / Vallin nallakam niraiyap, palporik / Kaana vaaranam eenum / Kaataaki viliyum naatutai yoarae!

பகிர்
கதை

ஊன் விரும்பிய புலி · மருதன் இளநாகனார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி · குறிப்பு: நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி