குறிஞ்சி · கபிலர்
இரவுக்குறி வந்ததலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள்தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. · கபிலர் பாடியது
மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றேகொன்றோர் அன்ன கொடுமையோ டின்றேயாமங் 1கொளவரின் கனைஇக் காமங்கடலினும் உரைஇக் கரைபொழி யும்மேஎவன்கொல் வாழி தோழி மயங்கிஇன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்குஇறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்கான நாடன் வருஉம் யானைக்கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறிமாரி வானந் தலைஇ நீர்வார்புஇட்டருங் கண்ண படுகுழி இயவின்இருளிடை மிதிப்புழி நோக்கியவர்தளரடி தாங்கிய சென்ற தின்றே
Manrupaa tavinthu manaimatin thanrae / Konroar anna kotumaiyoa tinrae / Yaamang 1kolavarin kanaiik kaamang / Katalinum uraiik karaipozhi yummae / Evankol vaazhi thoazhi mayangki / Inna maakavum nannar nenjam / Ennotum ninnotunj soozhaathu kaimmikku / Irumpupat tiruliya ittarunj silampir / Kurunjunaik kuvalai vantupatas sootik / Kaana naatan varuum yaanaik / Kayirruppurath thanna kanmisais siruneri / Maari vaanan thalaii neervaarpu / Ittarung kanna patukuzhi iyavin / Irulitai mithippuzhi noakkiyavar / Thalarati thaangkiya senra thinrae
இரவுக்குறி வந்ததலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள்தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. · கபிலர் பாடியது