பாடல் 251 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 251 · பாலை · மாமூலனார்

தூதும் சென்றன தோளுஞ் செற்றும்ஓதி யொண்ணுதல் பசலையும் மாயும்வீங்கிழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடுநாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண்தங்கலர் வாழி தோழி வெல்கொடித்துனைகா லன்ன புனைதேர்க் கோசர்தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்பணியா மையிற் பகைதலை வந்தமாகெழு தானை வம்ப மோரியர்புனைதேர் நேமி யுருளிய குறைத்தஇலங்குவெள் ளருவிய 2அறைவா யும்பர்மாசில் வெண்கோட்டு அண்ணல் யானைவாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலிமாநிலம் நெளியக் 3குத்திப் புகலொடுகாப்பில வைகுந் தேக்கமல் சோலைநிரம்பா நீளிடைப் போகிஅரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.

Thoothum senrana thoalunj serrum / Oathi yonnuthal pasalaiyum maayum / Veengkizhai nekizhas saaays sellalotu / Naampatar koorum arunthuyar kaetpin / Nanthan verukkai yeythinum marravan / Thangkalar vaazhi thoazhi velkotith / Thunaikaa lanna punaithaerk koasar / Thonmoo thaalath tharumpanaip pothiyil / Innisai murasang katippikuth thirangkath / Themmunai sithaiththa njaanrai moakoor / Paniyaa maiyir pakaithalai vantha / Maakezhu thaanai vampa moariyar / Punaithaer naemi yuruliya kuraiththa / Ilangkuvel laruviya 2araivaa yumpar / Maasil venkoattu annal yaanai / Vaayul thappiya arungkaezh vayappuli / Maanilam neliyak 3kuththip pukalotu / Kaappila vaikun thaekkamal soalai / Nirampaa neelitaip poaki / Arampoazh avvalai nilainekizhth thoarae.

பகிர்
கதை

பாலை · மாமூலனார்

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. · மாமூலனார் பாடியது