குறிஞ்சி · 4நக்கண்ணையார்
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. · 4நக்கண்ணையார் பாடியது
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்துவாள்வரி நடுங்கப் புகல்வந்து ஆளிவெண்கோடு புய்க்குந் தண்கமழ் சோலைப்பெருவரை யடுக்கத்து ஒருவேல் ஏந்தித்தனியன் வருதல் அவனும் அஞ்சான்பனிவார் கண்ணேன் ஆகி நோயடஎமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்யாங்குச் செய்வாங்கொல் தோழி ஈங்கைத்துய்யவிழ் பனிமலர் உதிர வீசித்தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்பெருங்குளங் காவலன் போலஅருங்கடி அன்னையுந் துயின்மறந் தனளே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. · 4நக்கண்ணையார் பாடியது