பாடல் 257 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 257 · பாலை · — உறையூர் மருத்துவன் தாமோதரனார்

வேனிற் பாதிரிக் கூனி மாமலர்நரைவாய் வாடல் நாறும் நாள்சுரம்அரியார் சிலம்பின் சீறடி சிவப்பஎம்மொ டொராறு படீஇயர் யாழநின்பொம்மல் ஓதி பொதுள வாரிஅரும்பற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்தநின்தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்வண்டுகடிந் தோம்பல் தேற்றாய் அணிகொளநுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கைமெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசிவல்லுவை மன்னால் நடையே கள்வர்பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்துநாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல்கல்லா உமணர்க்குத் தீமூட் டாகும்துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டுஅரிலிவர் புற்றத்து அல்கிரை நசைஇவெள்ளரா மிளிர வாங்கும்பிள்ளை எண்கின் மலைவயி னானே.
பகிர்
கதை

பாலை · --- உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. · --- உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது