பாலை · ---- பாலைபாடிய பெருங்கடுங்கோ
புணர்ந்துடன் போயினகாலை இடைச்சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. · ---- பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது
கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீவேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்சில்லைங் கூந்தல் அழுத்தி மெல்லிணர்த்தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலிநின்அணிமாண் சிறுபுறங் காண்கம் சிறுநனிஏகென ஏகல் நாணி ஒய்யெனமாகொள் நோக்கமொடு மடங்கொளச் சாஅய்நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டுயாமுந் துறுதல் செல்லேம் ஆயிடைஅருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலிகளிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டுவில்லோர் குறும்பில் ததும்பும்வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே.
புணர்ந்துடன் போயினகாலை இடைச்சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. · ---- பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது