மருதம் · --- பாவைக் கொட்டிலார்
நயப்புப்பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. · --- பாவைக் கொட்டிலார் பாடியது
குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்வாளையோ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்தெண்கட் டேறல் மாந்தி மகளிர்நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க்காஞ்சி நீழற் குரவை யயருந்தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்தேர்தர வந்த நேரிழை மகளிர்ஏசுப என்பவென் நலனே அதுவேகொல்களிற் றியானை நல்கல் மாறேதாமும் பிறரும் உளர்போற் கேறல்முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்யானவண் வாரா மாறே 1வரினேசுடரொடு திரிதரு நெருஞ்சி போலஎன்னொடு திரியேன் ஆயின் வென்வேல்மாரி யம்பின் மழைத்தோற் சோழர்வில்லீண்டு குறும்பின் 2வல்லத்துப் புறமிளைஆரியர் படையின் உடைகவென்நேரிறைமுன்கை வீங்கிய வளையே.
Kuzharkaar saempin kozhumatal akalilaip / Naalirai thareeiya ezhuntha neernaay / Vaalaiyoa tuzhappath thuraikaluzhn thamaiyin / Thenkat taeral maanthi makalir / Nunseyal angkutam ireeip panpin / Makizhnan paraththaimai paati yavizhinark / Kaanji neezhar kuravai yayarun / Theemperum poykaith thuraikaezh ooran / Thaerthara vantha naerizhai makalir / Aesupa enpaven nalanae athuvae / Kolkalir riyaanai nalkal maarae / Thaamum pirarum ularpoar kaeral / Muzhavimizh thunangkai thoongkum vizhavin / Yaanavan vaaraa maarae 1varinae / Sutarotu thiritharu nerunji poala / Ennotu thiriyaen aayin venvael / Maari yampin mazhaiththoar soazhar / Villeentu kurumpin 2vallaththup puramilai / Aariyar pataiyin utaikaven / Naeriraimunkai veengkiya valaiyae.
நயப்புப்பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. · --- பாவைக் கொட்டிலார் பாடியது