தலைபணிந்து இறைஞ்சியோன் · அரிசில் கிழார்
திணை: வாகை · துறை: சால்பு முல்லை
பாசறை யீரே ! பாசறை யீரே !துடியன் கையது வேலே ; அடிபுணர்வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பாணன் கையது தோலே ; காண்வரக்கடுந்தெற்று மூடையின் .. .. ..வாடிய மாலை மலைந்த சென்னியன்;வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடுநெடுநகர் வந்தென, விடுகணை மொசித்தமூரி வேண்டோள் .. .. .. .. ..சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்துஇறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர்அலமரும் கழனித் தண்ணடை ஒழிய;இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.
Paasarai yeerae ! paasarai yeerae ! / Thutiyan kaiyathu vaelae ; atipunar / Vaangkuiru maruppin theenthotais seeriyaazhp / Paanan kaiyathu thoalae ; kaanvarak / Katuntherru mootaiyin .. .. .. / Vaatiya maalai malaintha senniyan; / Vaenthuthozhil ayarum arunthalais surramotu / Netunakar vanthena, vitukanai mosiththa / Moori vaentoal .. .. .. .. .. / Saerupatu kuruthis semmaluk koao! / Maaruseru netuvael maarpuulam poaka; / Ninampothi kazhalotu nilam saern thanane; / Athukantu, paranthoar ellaam-pukazhath thalaipaninthu / Irainji yoanae, kurusil ! _ pinangkukathir / Alamarum kazhanith thannatai ozhiya; / Ilampaatu okkal thalaivarkuoar / Karampais seeroor nalkinan enavae.
திணை: வாகை · துறை: சால்பு முல்லை