பழநி
பழநி
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்ததனதனன தந்த தந்த ...... தனதானமருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்திமதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலேவகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்தமதலையென வந்து குன்றின் ...... வடிவாகிஇருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்துஇரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்துனிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோதிருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கைதிகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாததிடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்செறிவுடன் றிந்து வென்ற ...... பொறியாளர்பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்றபரமபத நண்ப ரன்பின் ...... மருகோனேபதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்கபழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.
பழநி
Palani