poem 116 · Purananuru · Many poets

புறநானூறு 116 · குதிரையும் உப்புவண்டியும் · கபிலர்

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;நோகோ யானே; தேய்கமா காலை!பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்,கலையுங் கொள்ளா வாகப்,பலவும்காலம் அன்றியும் மரம் பயம் பகரும்யாணர் அறாஅ வியன்மலை அற்றேஅண்ணல் நெடுவரை ஏறித், தந்தைபெரிய நறவின், கூர் வேற் பாரியதுஅருமை அறியார் போர் எதிர்ந்து வந்தவலம் படுதானை வேந்தர்பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

Theeneerp perung kuntu sunaip pooththa kuvalaik / Koompavizh muzhuneri puralvarum alkul, / Aenthezhil mazhaik kan, in nakai, makalir / Pun moosu kavalaiya mul mutai vaelip, / Panji munril, sirril aangkan, / Peerai naariya surai ivar marungkin, / Eeththilaik kuppai aeri umanar / Uppu oay ozhukai ennupa maathoa; / Noakoa yaanae; thaeykamaa kaalai! / Payil irunj silampir kalai paaynthu ukalavum, / Kalaiyung kollaa vaakap,palavum / Kaalam anriyum maram payam pakarum / Yaanar araaa viyanmalai arrae / Annal netuvarai aerith, thanthai / Periya naravin, koor vaer paariyathu / Arumai ariyaar poar ethirnthu vantha / Valam patuthaanai vaenthar / Polam pataik kalimaa ennu voarae.

Share
கதை

குதிரையும் உப்புவண்டியும் · கபிலர்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை