கம்பலை கண்ட நாடு · கபிலர்
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,பூழி மயங்கப் பல உழுது, வித்திப்பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,வாலிதின் விளைந்த புது வரகு அரியத்தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக்கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,பெருந் தோள் தாலம் பூசல் மேவர,வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தைஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்பாடி யானாப் பண்பிற் பகைவர்ஓடுகழல் கம்பலை கண்டசெருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!
Veppul vilaintha vaengkais senj suval / Kaarp peyar kaliththa perum paattu eeraththup, / Poozhi mayangkap pala uzhuthu, viththip / Palli aatiya palkilais sevvik / Kalai kaal kazhaalin, thoatu olipu nanthi, / Men mayir punirrup petai katuppa neetik, / Karunthaal poaki, orungku peel virinthu, / Keezhum maelum enjaamaip pala kaayththu, / Vaalithin vilaintha puthu varaku ariyath / Thinai koyyak, kavvai karuppa, avaraik / Kozhungkoti vilark kaay koatpathamaaka, / Nilam puthaip pazhuniya mattin thaeral / Pul vaeyk kurampaik kutithorum pakarnthu. / Naruneyk katalai visaippas soaru attup, / Perun thoal thaalam poosal maevara, / Varunthaa yaanarththu; nanthung kolloa: / Irumpal koonthal matanthaiyar thanthai / Aatu kazhai naralum saet simaip, pulavar / Paati yaanaap panpir pakaivar / Oatukazhal kampalai kanta / Seruvenj saeey peruviral naatae!
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை