poem 125 · Purananuru · Many poets

புறநானூறு 125 · புகழால் ஒருவன் · வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,பரூஉக் கண் மண்டை யடு, ஊழ்மாறு பெயரஉண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,நள் ளாதார் மிடல் சாய்ந்தவல்லாள ! நின் மகிழிருக் கையேஉழுத நோன் பகடு அழிதின் றாங்குநல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே;குன்றத் தன்ன களிறு பெயரக்,கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;‘வெலீஇயோன் இவன்’ எனக்‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்புவிரைந்து வந்து, சமந் தாங்கிய,வல்வேல் மலையன் அல்லன் ஆயின்நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு’ எனத்,தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,‘தொலைஇயோன் அவன்’ என,ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்குஇருக்கை சான்ற உயர் மலைத்திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.

Paruththip pentin panuval anna, / Neruppus sinanthanintha ninanthayangku kozhungkurai, / Paroouk kan mantai yatu, oozhmaaru peyara / Unkum, enthai! nir kaankuvan thisinae, / Nal laathaar mital saayntha / Vallaala ! nin makizhiruk kaiyae / Uzhutha noan pakatu azhithin raangku / Nallamizhthu aaka, nee nayanthunnum naravae; / Kunrath thanna kaliru peyarak, / Katanthattu venroanum, nir koorummae; / ‘veleeiyoan ivan’ enak / ‘kazhalanip polintha saevati nilang kavarpu / Virainthu vanthu, saman thaangkiya, / Valvael malaiyan allan aayin / Nallamar kataththal elithuman, namakku’ enath, / Thoarroan thaanum, nirkoo rummae, / ‘tholaiiyoan avan’ ena, / Orunee aayinai; peruma! peru mazhaikku / Irukkai saanra uyar malaith / Thiruththaku saeey ! nir perrisi noarkkae.

Share
கதை

புகழால் ஒருவன் · வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: தேர்வண் மலையன் · குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்