திருச்செந்தூர்
திருச்செந்தூர்
தந்த தானன தானனதந்த தானன தானனதந்த தானன தானன ...... தனதானவெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடுவின்ப சாகர மோவடு ...... வகிரோமுன்வெந்து போன புராதன சம்ப ராரி புராரியைவென்ற சாயக மோகரு ...... விளையோகண்தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமதசங்க மாதர் பயோதர ...... மதில்மூழ்குசங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தருதண்டை சேர்கழ லீவது ...... மொருநாளேபஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்பண்டு போலம ராவதி ...... குடியேறப்பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரைபங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனேசெஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகிதிங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வேசெண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தருசெந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
திருச்செந்தூர்
திருச்செந்தூர்