பழநி
பழநி
தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் ...... தனதானஅணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக் ...... கணையாலும்அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க் ...... கணையாலும்பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும்பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்பெறுதற் கருளைத் ...... தரவேணும்கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்கனியைக் கணியுற் ...... றிடுவோனேகமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்கருதிச் சிறைவைத் ...... திடுவோனேபணியப் பணியப் பரமர்ப் பரவப்பரிவுற் றொருசொற் ...... பகர்வோனேபவளத் தவளக் கனகப் புரிசைப்பழநிக் குமரப் ...... பெருமாளே.
பழநி
Palani