பழநி
பழநி · ராகம் பெளளி · தாளம் அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த ...... தனதானஅவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்துஅழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்றுஅதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்றுதிரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பைமணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்தமலைமகள்கு மார துங்க ...... வடிவேலாபவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்துபடியதிர வேந டந்த ...... கழல்வீராபரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்துபழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
பழநி · ராகம் பெளளி · தாளம் அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
பழநி · ராகம் பெளளி · தாளம் அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)