பழநி
பழநி
தத்தா தனத்ததன தத்தா தனத்ததனதானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதானஇத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுதகேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலையிச்சீர் பயிற்றவய தெட்டொடு மெட்டுவரவாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகிஇக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகுவாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபலதிக்கோடு திக்குவரை மட்டோ டி மிக்கபொருள்தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுகமிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடைமுழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியமுடிச்சத்தான புத்தியது கெட்டே கிடக்கநமனோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுதுபெற்றோர்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியினோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச்சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலையேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமையஇட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவிநீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனதுசற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதைபேசிப் பணிந்துருகு நேசத்தை யின்றுதர ...... இனிவரவேணும்தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுததாதத் தனந்ததன தானத் தனந்ததனசெச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகுதாதத்த செந்திகுத தீதத்த செந்தரிகதித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகுதோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருதுவேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவருசித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலைமீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணிசுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுருநாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பாமத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுகனேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொருமுட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைகளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிகமட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவைமார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய ...... மருமகனாகிவற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைகளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணியத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளியாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுயவர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநிவாழவுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி ...... வருபெருமாளே.
பழநி
Palani