பழநி
பழநி
தனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்ததனதனன தானான தானதன தந்த ...... தனதானஇருகனக மாமேரு வோகளப துங்ககடகடின பாடீர வாரமுத கும்பமிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோஇலகுமல ரேவாளி யாகியஅ நங்கனணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்தஇளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல்பெருகியொரு காசேகொ டாதவரை யைந்துதருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்துபெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப்பிணியினக மேயான பாழுடலை நம்பிஉயிரையவ மாய்நாடி யேபவநி ரம்புபிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோகருணையுமை மாதேவி காரணிய நந்தசயனகளி கூராரி சோதரிபு ரந்தகடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலாகருடனுடன் வீறான கேதானம்வி ளங்குமதிலினொடு மாமாட மேடைகள்து லங்குகலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனேபரவையிடை யேபாத காசுரர்வி ழுந்துகதறியிட வேபாக சாதனனு நெஞ்சுபலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசாபலமலர்க ளேதூவி யாரணந வின்றுபரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்துபழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.
பழநி
Palani