பழநி
பழநி
தனத்தான தனதனன தனத்தான தனதனனதனத்தான தனதனன ...... தனதானஉயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள்உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியமதுடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப்பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபலபடப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர்படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவுபதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும்தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்தரத்தாடல் புரியுமரி ...... மருகோனேதமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வேசெயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருதுசெயித்தோடி வருபழநி ...... யமர்வோனேதினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவுதிருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
பழநி
பழநி