பழநி
பழநி
தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தன ...... தனதானஆல காலமெ னக்கொலை முற்றியவேல தாமென மிக்கவி ழிக்கடையாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரைஆர வாணைமெ யிட்டும றித்துவிகார மோகமெ ழுப்பிய தற்குறவான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச்சால மாலைய ளித்தவர் கைப்பொருள்மாள வேசிலு கிட்டும ருட்டியெசாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர்தாக போகமொ ழித்துஉனக்கடியானென் வேள்விமு கத்தவ முற்றிருதாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயேவால மாமதி மத்தமெ ருக்கறுகாறு பூளைத ரித்தச டைத்திருவால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனேமாய மானொட ரக்கரை வெற்றிகொள்வாலி மார்புதொ ளைத்திட விற்கொடுவாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனேநாலு வேதந விற்றுமு றைப்பயில்வீணை நாதனு ரைத்தவ னத்திடைநாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனேநாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிருஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
பழநி
பழநி