திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் புன்னாக வராளி · தாளம் அங்கதாளம் (24)
தனதனன தான தானன தனதனன தான தானனதனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதானஅருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபனஅபிநவ விசால பூரணஅம்பொற் கும்பத் ...... தனமோதிஅளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதெனஅறவுமுற வாடி நீடியஅங்கைக் கொங்கைக் ...... கிதமாகிஇருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையிலிழைகலைய மாத ரார்வழியின்புற் றன்புற் ...... றழியாநீள்இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்இணையடிகள் பாடி வாழஎனெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயேதருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதியசதுர்மறையி னாதி யாகியசங்கத் துங்கக் ...... குழையாளர்தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவிதனைமுழுதும் வாரி யேயமுதுண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலைதெளிவினுடன் மூல மேயெனமுந்தச் சிந்தித் ...... தருள்மாயன்திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவியஜெயசரவ ணாம னோகரசெந்திற் கந்தப் ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் புன்னாக வராளி · தாளம் அங்கதாளம் (24)
திருச்செந்தூர் · ராகம் புன்னாக வராளி · தாளம் அங்கதாளம் (24)