காஞ்சீபுரம்
காஞ்சீபுரம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானகனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாககறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய்குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்குமணனென றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவானகுருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோசனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ்சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும்தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்சசிதரன் திக்குக் கத்தர கத்யன்திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ்செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம்