Song 312 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 312 · காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானகனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங்கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதைபுனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப்புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோஅனல்விடுஞ் செக்கட் டுக்கய மெட்டும்பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாகஅடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந்தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந்தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Share
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம்

A story

Kanchipuram