காஞ்சீபுரம்
காஞ்சீபுரம்
தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதானசலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்சகலவி னைக்கொத் திருந்தி டும்படிசதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும்தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலிலுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொருதனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன்பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கணபடமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலாபரிமள மிக்கச் சிவந்த நின்கழல்பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடுபகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோசிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடுசிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளிதிருமகள் கச்சுப் பொருந்தி டுந்தனதெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக்கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங்கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடுகருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம்