நெய்தல் · உலோச்சனார்
தோழி,செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. · உலோச்சனார் பாடியது
திரையுழந் தசைஇய நிரைவளை ஆயமொடுவருதிமில் எண்ணும் துறைவனொடு ஊரேஒருதன் கொடுமையின் அலர்பா டும்மேஅலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்அலையல் வாழிவேண் டன்னை உயர்சிமைப்பொதும்பில் புன்னைச் சினைசேர்பு இருந்தவம்ப நாரை இரிய ஒருநாள்பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்இருங்கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கிவயற்சுறா எறிந்தென வலவன் அழிப்பஎழில்பயங் குன்றிய சிறையழி தொழிலநிரைமணிப் புரவி விரைநடை தவிரஇழுமென் கானல் விழுமணல் அசைஇஆய்ந்த பரியன் வந்திவண்மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே.
தோழி,செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. · உலோச்சனார் பாடியது