பாடல் 193 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 193 · பாலை · மதுரை மருதனிளநாகனார்

கானுயர் மருங்கில் கவலை யல்லதுவானம் வேண்டா வில்லேர் உழவர்பெருநாள் வேட்டம் கிளையெழ வாய்த்தபொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்பொறித்த போலும் வானிற எருத்தின்அணிந்த போலுஞ் செஞ்செவி எருவைகுறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்துஅருங்கவட் டுயர்சினைப் பிள்ளை யூட்டவிறைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடிதொல்பசி முதுநரி வல்சி யாகும்சுரனமக் கெளிய மன்னே நன்மனைப்பன்மாண் தங்கிய சாயல் இன்மொழிமுருந்தேர் முறுவல் இளையோள்பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.
பகிர்
கதை

பாலை · மதுரை மருதனிளநாகனார்

பொருள வலித்தநெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவுஅழுங்கியது. · மதுரை மருதனிளநாகனார் பாடியது