முல்லை · இடைக்காடனார்
பருவங் கண்டு ஆற்றாமைமீதூரத் தலைமகள் சொல்லியது. · இடைக்காடனார் பாடியது
பேருறை தலைஇய பெரும்புலர் வைகறைஏரிடம் படுத்த இருமறுப் பூழிப்புறமாறு பெற்ற பூவல் ஈரத்துஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்வித்திய மருங்கின் விதைபல நாறிஇரலை நன்மான் இனம்பரந் தவைபோல்கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்கறங்குபறைச் சீரின் 4இறங்க வாங்கிக்களைகால் கழீஇய பெரும்புன வரகின்கவைக்கதிர் இரும்புறங் கதூஉ உண்டகுடுமி நெற்றி நெடுமாத் தோகைகாமர் கலவம் பரப்பி ஏமுறக்கொல்லை யுழவர் 1கூழ்நிழல் ஒழித்தவல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்துகிளிகடி மகளின் விளிபடப் பயிரும்கார்மன் இதுவால் தோழி போர்மிகக்கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட கடும்பரிவிரியுளை நன்மான் கடைஇவருதும் என்றவர் தெளித்த போழ்தே.
பருவங் கண்டு ஆற்றாமைமீதூரத் தலைமகள் சொல்லியது. · இடைக்காடனார் பாடியது