பாலை · மாமூலனார்
பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறீஇயது. · மாமூலனார் பாடியது
மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்பூநெகிழ் அணையிற் சாஅய தோளும்நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்ததொல்நலம் இழந் துயரமொடு என்னதூஉம்இனையல் வாழி தோழி முனையெழமுன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்மறமிகு தானைக் கண்ணன் எழினிதேமுது குன்றம் இறந்தன ராயினும்நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்தோள்தாழ்பு இருளிய குவையிருங் கூந்தல்மடவோள் தழீஇய விறலோன் மார்பில்புன்தலைப் புதல்வன் ஊர்பிழிந் தாங்குக்கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டுஇனஞ்சால் வேழங் கன்றூர்பு இழிதரப்பள்ளிகொள்ளும் பனிச்சுரம் நீந்திஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்வினைவலி யுறூஉம் நெஞ்சமொடுஇனைய ராகிநப் பிரிந்திசி னோரே.
Maamalar vannam izhantha kannum / Poonekizh anaiyir saaaya thoalum / Nannar maakkal vizhaivanar aayntha / Tholnalam izhan thuyaramotu ennathooum / Inaiyal vaazhi thoazhi munaiyezha / Munnuvar oattiya muranmiku thiruvin / Maramiku thaanaik kannan ezhini / Thaemuthu kunram iranthana raayinum / Neetalar yaazhanin niraivalai nekizhath / Thoalthaazhpu iruliya kuvaiyirung koonthal / Matavoal thazheeiya viraloan maarpil / Punthalaip puthalvan oorpizhin thaangkuk / Katunjool matappiti thazheeiya venkoattu / Inanjaal vaezhang kanroorpu izhitharap / Pallikollum panissuram neenthi / Ollinark konrai oangkumalai aththam / Vinaivali yurooum nenjamotu / Inaiya raakinap pirinthisi noarae.
பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறீஇயது. · மாமூலனார் பாடியது