நெய்தல் · உலோச்சனார்
பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது. · உலோச்சனார் பாடியது
நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்பறிகொள் கொள்ளையர் மறுக உக்கமீனார் குருகின் கானலம் பெருந்துறைஎல்லை தண்பொழில் சென்றெனச் செலீஇயர்தேர்பூட்டு அயர ஏஎய் வார்கோல்செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச்சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்துதீங்கா யினளிவ ளாயின் தாங்காதுநொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப்பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனாற்சேணின் வருநர் போலப் பேணாய்இருங்கலி யாணரெம் சிறுகுடித் தோன்றின்வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்துறையும் மான்றின்று பொழுதே சுறவும்ஓதம் மல்கலின் மாறா யினவேஎல்லின்று தோன்றல் செல்லா தீமெனஎமர்குறை கூறத் தங்கி ஏமுறஇளையரும் புரவியும் இன்புற நீயும்இல்லுறை நல்விருந் தயர்தல்ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே.
Naalvalai mukantha koalval parathavar / Nunangkumanal aangkan unangkap peymmaar / Parikol kollaiyar maruka ukka / Meenaar kurukin kaanalam perunthurai / Ellai thanpozhil senrenas seleeiyar / Thaerpoottu ayara aeey vaarkoal / Serithoti thiruththip paarumayir neevis / Sellini matanthainin thoazhiyotu manaiyenas / Solliya alavai thaanperithu kaluzhnthu / Theengkaa yinaliva laayin thaangkaathu / Nothumalar poalap piriyir kathumenap / Pirithon raakalum anjuval athanaar / Saenin varunar poalap paenaay / Irungkali yaanarem sirukutith thoanrin / Vallethir kontu mellithin vinaiith / Thuraiyum maanrinru pozhuthae suravum / Oatham malkalin maaraa yinavae / Ellinru thoanral sellaa theemena / Emarkurai koorath thangki aemura / Ilaiyarum puraviyum inpura neeyum / Illurai nalvirun thayarthal / Olluthum perumanee nalkuthal perinae.
பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது. · உலோச்சனார் பாடியது