பாலை · ஒளவையார்
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · ஒளவையார் பாடியது
இடைபிற ரறித லஞ்சி மறைகரந்துபேஎய் கண்ட கனவிற் பன்மாண்நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்மறமிகு தானைப் பசும்பூட் பொறையன்கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலைமாயிருங் கொல்லி யுச்சித் தா அய்த்ததைந்துசெல் லருவியின் அலரெழப் பிரிந்தோர்புலங்கந் தாக இரவலர் செலினேவரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்நிரைபறைக் குரீஇயினங் காலைப் போகிமுடங்குபுறச் செந்நெற் றரீஇயர் ஓராங்குஇறைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்படர்கொண் மாலைப் படர்தந் தாங்குவருவரென் றுணர்ந்த மடங்ககெழு நெஞ்சம்ஐயந் தெளியரோ நீயே பலவுடன்வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர்கணநிரை மணியி னார்க்குஞ் சுரனிறந்துஅழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்வழிநடைச் சேறல் வலித்திசின் யானே
Itaipira raritha lanji maraikaranthu / Paeey kanta kanavir panmaan / Nunnithin iyaintha kaamam venvael / Maramiku thaanaip pasumpoot poraiyan / Kaarpukan retuththa soorpukal nananthalai / Maayirung kolli yussith thaa ayth / Thathainthusel laruviyin alarezhap pirinthoar / Pulangkan thaaka iravalar selinae / Varaipurai kalirrotu nankalan eeyum / Niraiparaik kureeiyinang kaalaip poaki / Mutangkupuras senner rareeiyar oaraangku / Iraithaer kotpina vaakip pozhuthupatap / Patarkon maalaip patarthan thaangku / Varuvaren runarntha matangkakezhu nenjam / Aiyan theliyaroa neeyae palavutan / Varanmaram porunthiya silvee tumanar / Kananirai maniyi naarkkunj suraniranthu / Azhineer meenpeyarn thaangkavar / Vazhinatais saeral valiththisin yaanae
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · ஒளவையார் பாடியது